சங்கர் கஃபே சுத்த சைவம்

ரெண்டு வருசத்துக்கு அப்றம் குடும்பத்தோட ரயில் பயணம் அதனால இரவு 7மணிக்கு நம்ம சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் வந்தாச்சு. ரயிலுக்கு இன்னும் ரெண்டுமணி நேரம் இருந்தது. சரி னு சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் ல இருந்து பொடி நடையா வரும்போது சரி எங்க சாப்பிடலாம் யோசிச்சிகிட்டே நடந்தேன். சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் ரௌண்டான வே வந்துடுச்சு . ஐயகோ இனி எந்த பக்கம் போயி சாப்பிடறதுனு முடிவு எடுக்க சுத்தி சுத்தி பார்த்து முடிவுபண்றதுக்குள்ள என் குடும்பம் "சங்கர் கஃபே சுத்த சைவம் " ஒரு ஹோட்டல் ல பார்த்துட்டு அங்க போலாம்னு ஒரு சேர சேர்ந்து சொல்ராங்க. எனக்கோ "சங்கர் கஃபே சுத்த சைவம் " (அட கலக்கி கூட இல்லாம சாப்பிடணுமான்னு யோசிச்சேன்). ஆன பாக்க நல்லா டீசென்ட் அஹ் தான் இருந்தது. சரி னு உள்ள நுழைஞ்சுட்டேன். கூட்டமா இருந்தாலும் எங்களுக்கு இடமும் இருந்துச்சு . சரி வழக்கம் போல ரெண்டு தோசை ஆர்டர் பண்ணலாம் னு வந்தவருகிட்ட என்ன இருக்கு கேட்டேன் (எப்போதும், சும்மா கேட்டுட்டு தோசை தான் ஆர்டர் பண்ணுவோம் )… அவரு நாங்க இந்த ஹோட்டலுக்கு புதுசு னு கண்டுபுடுச்சுட்டாறுபோல. இங்க இப்போ chinese food நல்ல பேமஸ் னு சொல்லி chinese நூடுல்ஸ, Chilly parota & காளான் fried rice, பன்னீர் காளான் மசாலா, ஆலு கோபி மசாலான்னு சொன்னாரு. நான் வேற என்ன இருக்கு கேட்கும்போது அவரு புரிஞ்சிகிட்டு இங்க எல்லாமே Veg ஆ இருந்தாலும் டேஸ்ட் நல்லா இருக்கும் னு ஒரு சர்டிபிகேட் குடுத்தாரு. சரி சரி வீட்டுல இருந்து அம்மா கால் பண்ணி கேட்ட நாங்க தோசை தான் சாப்பிட்டேம் ஒரு கப்ஸா விட்டுடலாம் னு அவரு first சொன்ன Chilly Parota (விலை :60rs தான் ) கொண்டுவர சொன்னேன். அவரும் திருப்பிட்டு அப்றம் சைடிஷ் னு கேட்டாரு ( சைடிஷ் ஆஹ் இது வேற எங்கயோ கேட்குற வார்த்தை ஆச்சே, குடும்பம் வேற கூட இருக்கே னு நினைச்சிட்டு). மேல அவரை குழப்பவேணாம்னு நானு ஒரு முடிவுக்கு வந்து நீங்களே ஒன்னு நல்லதா கொண்டு வாங்கனு சொல்லிட்டேன். மெனு கார்டு பாத்துட்டு இருந்தேன். எல்லாம் விலையும் பரவலா னு சொல்ற அளவுக்கு இருந்தது.
5நிமிசத்துல வந்தது நல்ல சூடா ஆவி பறக்க பறக்க வந்தது. எனக்கு என்ன ஆர்வம் னா என்ன சைடிஷ் என்ன கொண்டு வந்தாருனு பார்க்க
அட வந்தது கோபி 65 … ஹ்ம்ம் நல்ல காம்பினேஷன் னு நான் சொல்றதுக்குள்ள என் குடும்பம் சொல்லிடுச்சு.
நல்ல வாசனை, நல்லா வெந்து காரம் எல்லாம் கரெக்ட் ஆஹ் இருக்குறமாரி வாசனை வந்துட்டே இருந்துச்சி ( எங்க பாட்டி சொன்ன வார்த்தை… சாப்பாட வாசனை புடுச்ச டேஸ்ட் நல்ல இருக்காதுன்னு சொல்லி வச்சது ஒரு பக்கம் mind ல வருது ) . சரி னு ஆரம்பிச்சேம் நல்ல சூடா இருந்தது அதனால 5 வாய் சாப்பிடும்போது ஒன்னும் பெருசா தெரியல அப்றம் மிதமான சூட்டுக்கு வந்தது. காரம் உப்பு மசாலான்னு மிக்ஸ் ஆன ஒரு டேஸ்ட் "மிக அருமைனே சொல்லலாம் "
கூடவே அந்த சைடிஷ். ஒரு பிடி சோறு ஒரு பிடி சைடிஷ் னு ரசிச்சு சாப்பிட ஆரம்பிச்சுட்டேன். அப்போ எதிரே ரெண்டு நண்பர்கள் வந்து உக்காந்தாங்க என்னைப்போலவே pure veg ஆஹ் னு கேட்டு கொஞ்சம் அதிர்ச்சி ஆனாங்க. ஆனாலும் நான் ரசிச்சு சாப்பிடறதுல அவங்களுக்கு அப்டி ஒரு டவுட் ஏன் னா அது பார்க்க அசல் NON VEG மாரி இருந்தது (பார்வைக்கு மட்டுமே), சரி சரி நெக்ஸ்ட் என்னனு யோசிச்சு நம்ம சர்வர் அ (அப்டி பழகிட்டாரு )கூப்பிட்டு நெக்ஸ்ட் ஒன்னு மெயின் கோர்ஸ் ஒன்னு சைடு டிஷ் னு அவரு சாய்ஸ் கு விட்டுட்டேன். வந்தது Kaima Parota & Veg Fried rice னு அதும் 60ரூபாய் தான். விலைக்கும் சுவைக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லலாம். மனம் திருப்தியா சாப்பிட்டு கிளம்ப 45நிமிஷம் ஆச்சு. 1000 முறை இந்த ரயில்வே ஸ்டேஷன் ரௌண்டான தாண்டி போயிருப்பேன் ஒரு முறை கூட வரலையே ஒரு பீலிங்… அப்போ தான் தோணுச்சு எதுக்கும் ஒரு ஆரம்பம் வேணும்னு . பில் கட்டிட்டு கேட்டேன் டெலிவரி பண்ணுவீங்களா வீட்டுக்குனு…அவங்க நாங்க ஸ்விக்கி, ஸ்மோட்டா ல இருக்கோம் னு. அட அங்கேயும் இந்த ஹோட்டலை மிஸ் பண்ணியிருக்கோமே கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவலை… ஆனா ஒரு முடிவுக்கு வந்துட்டேன் இனி ரயில் பயணம் னா “சங்கர் கஃபே” னு மைண்ட் ல கண்டிப்பா வரும்.

ரேட்டிங்:
Veg noodles - 4/5
Gobi 65 - 4/5
Chilly Parota- 5/5
Mushroom fried rice - 4/5
Kaima Parota - 4/5
Veg fried rice- 4/5

எங்க அதிர்ஷ்டமா னு தெரியல எல்லாம் அருமை யா இருந்துச்சு

ஹோட்டல் அட்ரஸ்: சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில், திருச்சி